தே.தொ.ப.ப.தி. என்பது தொழில்நுட்பக் கல்வித்தகுதி பெற்ற இளைஞர்களுக்கு அவர்களது பணிப்புலத்தில் தேவைப்படும் செய்முறை அறிவும் திறனும் அளிப்பதற்கான ஓராண்டுத் திட்டமாகும். தொழில் பழகுநர்கள் தொழில் நிறுவனங்களால் அவர்களின் பணியிடத்திலேயே பயிற்சியளிக்கப்படுகிறார்கள். பயிற்சி பெற்ற மேலாளர்கள், சிறப்பாக தயாரிக்கப்பட்ட பயிற்சிக் கட்டகங்களின் உதவியுடன் பயிற்சியளித்துத் தொழில் பழகுநர்கள் வேலையை விரைவாகவும் திறமையுடன் செய்யக் கற்றுக்கொள்வதை உறுதி செய்கிறார்கள். தொழில் பழகும் காலத்தில் தொழில் பழகுநர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும். இவ்வுதவித்தொகையில் 50 விழுக்காடு பணியமர்த்தும் நிறுவனத்திற்கு மத்திய அரசால் ஈடு செய்யப்படும். பயிற்சிக்கால முடிவில் தொழில் பழகுநர்களுக்குத் தேர்ச்சித்திறன் சான்றிதழ் இந்திய அரசால் வழங்கப்படும். இதனை மதிப்புமிக்க பணி அனுபவச் சான்றிதழாக இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். தொழில் பழகுநர்கள் பயிற்சிக்காகச் சிறந்த பயிற்சி அளிப்பதற்கான வசதிகள் உள்ள மைய, மாநில மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தப் படுவார்கள். தே.தொ.ப.ப.தி. இந்திய இளைஞர்களைத் திறன்மிக்கவர் களாக்குவதற்கான இந்திய அரசின் முன்னோடித் திட்டமாகும்.
Click The Below links to know what we do region specific:
தொழில் பழகுதல் என்பது ஒரு தேர்ந்த கைத்தொழில் வல்லுநரின் கீழ் பணிபுரிந்து ஒரு தொழிலையோ அல்லது வணிகத்தையோ கற்றுக்கொள்ளுதல் என்பது காலந்தோறும் மேற்கொள்ளப்படும் ஒரு முறையாகும். தே.தொ.ப.ப.தி. என்பது நவீன காலத்தில் தேவைப்படும் வேலைகளுக்குத் தொழில்நுட்பம் ஒரு தேர்ந்த பயிற்சியாளரிடம் பணிபுரிந்து ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வதற்கான திட்டமாகும். வேலை செய்யும்போதே பொருளீட்டுதல் என்பது ஒரு இரட்டிப்புப் பயனளிக்கும் திட்டமாகும். தொழில் பழகுதல் என்பது ஒரு திறனைக் கற்க விரும்பும் ஒருவருக்கும் (தொழில் பழகுநர்) திறன்மிக்க வேலை தேவைப்படும் ஒரு வேலை யளிப்பவருக்கும் இடையிலான ஓர் ஒப்பந்தம் ஆகும். தொழில் பழகுநர்கள், தங்களுக்குரிய வேலைப்புலத்தில் மிக முன்னேற்றமான அண்மைக் காலத்தியப் பயன்பாடுகளையும், செய்முறைகளையும் மற்றும் முறைகளையும் மிகச்சிறந்த தொழில் நிறுவனங்களிலிருந்து பெறுகிறார்கள். இது வகுப்பறையிலிருந்து வேலைப் பின்புலத்திற்குச் செல்லும் ஒரு பள்ளி / கல்லூரி மாணவனுக்கும் இடைப்பட்ட நிலையாகச் செயல்படும். தொழில் பழகுநர்கள் மென்திறன்கள், பணிப் பண்பாடு, தொழில் அறங்கள், தொழில் நிறுவனங்களின் நடத்தை ஆகியவற்றை தங்கள் பயிற்சிக் காலத்தின்போது கற்றுக் கொள்வார்கள். இது எதிர்காலத்தில் ஒரு நிரந்தரமான பணியைத் தேடுவதில் அவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். பயிற்சிக்கால முடிவில் ஒரு குறிப்பிட்ட புலத்தில் அவர்கள் பயிற்சி மற்றும் தேர்ச்சித்திறன் பெற்றுள்ளமையை உறுதிப்படுத்தும் விதமாக சான்றிதழ் ஒன்று தொழில் பழகுநருக்கு வழங்கப்படும்.
Shri Dharmendra Pradhan
Hon'ble Minister of Education
Shri Rajkumar Ranjan Singh
Hon'ble Minister of State for Education
Smt Annpurna Devi
Hon'ble Minister of State for Education
Dr. Subhas Sarkar
Hon'ble Minister of State for Education
National Apprenticeship Training Scheme (NATS) portal provides a platform for various stakeholders like Students, Establishments and Institutions to leverage the Apprenticeship training programme.
உள்ளடக்க செய்முறைப் பயிற்சிக்காக அனுபவப் பயிற்சி / வாரியம் வாரியங்கள் மூலம் வழங்கப்படும்
Copyright © 2023 NATS. All Rights Reserved.